2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சென்கூம்ஸ் தோட்ட பாதையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.கிஷாந்தன்


லிந்துலை - மெராயா நகரத்தில் இருந்து கவுலினா தோட்ட வழியாக சென்கூம்ஸ் தோட்டத்திற்கு செல்லும் பாதை புனரமைப்பின்றி காணப்படுவதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்பாதையினூடாக மெராயா, ஹோல்ரீம், கவுலினா, மட்டுக்கலை போன்ற 4 பிரதேச மக்கள் போக்குவரத்துக்களை

மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்பாதையானது நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் இவ்வழியால் போக்குவரத்தை மேற்கொள்ளும் மாணவர்கள், அரச, அரசசார்பற்ற தாபனங்களின் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குன்றும் குழியுமாக காணப்படும் இப்பாதையில் மழைக்காலங்களின்போது நீர்தேங்கி விடுவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதை தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .