2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அட்டுவத்தையில் கைக்குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

கம்பளையில்  அட்டுவத்தை பகுதி வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்று (14) மாலை  கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. கம்பளை – தொலுவை பகுதியில் அட்டுவத்தை எனும் இடத்தில் முட்புதருக்குள்; இருந்து இக்கைக்குண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இக்கைக்குண்டு தொடர்பாக பிரதேசவாசிகள் கம்பளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட குண்டு செலிழக்கச் செய்யும் விசேட பிரிவினர் கைக்குண்டை  செயலிழக்கச் செய்தனர்.

இக்கைக்குண்டு துருப்பிடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் இக்கைக்குண்டை பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் நம்புகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .