2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹப்புத்தளை கெல்பன் த.விக்கு புதிய கட்டிடம்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எப்.எம். தாஹிர்

ஊவா மாகாண சபை மூலம் 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை கட்டியெழுப்பும் புதிய திட்டமொன்று நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு கல்வி கற்கும் மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ஹப்புத்தளை கெல்பன் தமிழ் வித்தியாலயம் மிக நீண்ட காலமாக பழமை வாய்ந்த சிறிய கட்டிடமொன்றில் 50 க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கி வந்தது. இந்நிலையில் ஊவா மாகாண முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய ஹப்புத்தளை கெலிபன் தமிழ் வித்தியாலயத்தை 50 க்கும் குறைவான மாணவர் கற்கும் பாடசாலை நிகழ்ச்சி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடனும் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பாடசாலையில் 30 மாணவர்கள் கற்று வருகின்றனர். அடுத்த வருடம் மாணவர் தொகை 50 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

பாடசாலை திறப்பு விழா ஊவா மாகாண முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சின் செயலாளர் ரணில் விஜயசிரி ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக மாணவர்களிடம் ஒப்படைத்தனர். இதன் போது வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0

  • hmamila@gmail.com Thursday, 21 November 2013 11:01 AM

    நன்றி முதலமைச்சர் ஊடக பகுதி









    =

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .