2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்தநாள்; கோட்லோஜ் தோட்டத்தில் விசேட பூஜை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் இன்று (18) திங்கட்கிழமை விசேட பூஜைகள் நடைபெற்றன.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துரை தலைவருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் தலைமையில் பூஜைகள் நடைபெற்றதோடு இதில் தோட்ட முகாமையாளர் லசந்த சமரகோன் மற்றும் தோட்ட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் 23வது பொது நலவாய மகாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கு ஆசி வேண்டியுமே இந்த பூஜைகள் நடைபெற்றதோடு இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் மேற்கொண்டிருந்தார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துரை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .