2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பல்கலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பேராதளை பல்கலைகழக மாணவர்களுக்கு கஞ்சா போதை பொருளை விற்பனை செய்தவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்கஸ்தோட்டை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது பல்கலைகழக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 14 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு புகையிலை அடங்கிய பீடி விற்பனை செய்த வியாபாரி ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கே இவ்வாறு புகையிலை அடங்கிய பீடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X