2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கற்பித்தல் உபகரணங்களின் கண்காட்சியும் பயிற்சி பட்டறையும்

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஞ்ஜன்


கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் திங்கட்கிழமை (2) கற்றல் உபகரணங்களின் கண்காட்சியும் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது.

கலாசாலையின் ஆசிரிய மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு கல்லூரி அதிபர் சந்திரலேக்கா கிங்ஸ்லி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  பேராசிரியர் சோ.சந்திரசேகரன்  கலந்துகொண்டு  கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தவை பெரும்பாலும் கழிவு பொருட்களினால் தயாரிக்கப்பட்டிருந்ததோடு சூழலை மாசுப்படுத்தாத வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கண்காட்சியை தொடர்ந்து பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றையும் பேராசிரியர் நடாத்தி அவர்களை இன்னும் சிறப்பாக வகுப்பறை கற்பித்தலில் ஈடுப்பட வழிக்காட்டினார்.



  Comments - 0

  • P.Vijayakanthan Saturday, 07 December 2013 02:17 PM

    வரவேற்புக்குரியது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X