2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நூரி தோட்ட கொலை வழக்கு; அத்தகொட்டாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை, நூரி தோட்ட முகாமையாளர்  நிஹால் பெரேரா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான அத்தகொட்ட என்றழைக்கப்படும் தெரணியகலை முன்னாள் பிரதேச சபைத்தலைவர் சம்பிக்க விஜயசிங்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் 23 பேருக்கான விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 23 பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்ததன் பின்னர் அடுத்த கட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவிசாவளை பிரதான நீதவான் அனுஷ்க செனவிரத்ன இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X