2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிவனொளிபாதமலையில் இராணுவத்தினால் பாலம் நிர்மாணம்

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


சிவனொளிபாதமலை பிரதேசத்தில் இராணுவத்தினால் இரும்பு பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.நல்ல தண்ணியிலிருந்து ஸ்ரீபாத உச்சிக்கு செல்லும் பாதையில் ரத்துபாலம் என்ற இடத்திலேயே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் காணப்பட்ட பாலம் பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டன. இதன் காரணமாக பக்தர்கள் அபாயத்தை எதிர்நோக்கினர்.இது தொடர்பாக ஸ்ரீபாத நாயக்க தேரர் பெங்கமுவ தம்மதின்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிரி ஆகியோர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து குறித்த பாலம் மூன்று நாட்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகும் சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X