2026 மே 15, வெள்ளிக்கிழமை

'இனவாதத்தை பேசி மக்களின் உண்வுகளை தூண்டுகின்றனர்'

Kogilavani   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

'முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனவாதத்தை பேசி மக்களின் உணர்வுகளை தூண்டுகின்றனர்' என வட மாகாண சபையின் தமிழத் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அய்யுப் அஸ்மின் தெரிவித்தார்.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடத்திய பொதுக் கூட்டம், அக்குறணை அரபா வரவேற்;பு மண்டபத்தில் சனிக்கிழமை(21) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


'கடந்த அரசாங்கத்தை மாற்றி, புதியதொரு ஆட்சியை ஏற்படுத்துவதற்கு இந்நாட்டின் முஸ்லிம் மக்களும் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர்.


இருந்தபோதும் முஸ்லிம்களின் தலைவரகள் என கூறிக் கொள்ளும் சிலர் முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை பேசி அவர்களது உணர்வை தூண்டுகின்றனர்.


கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சரை நியமிக்கும்போது எந்தவித நியாய தர்மமும் கடைபிடிக்கப்பட இடமளிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 4 ஆசனங்களும் உள்ளன. இந்நிலையில் யாருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று கேடடாலும்; அவர்களது பதில் 11 ஆசனங்கள் உள்ளவர்களுக்கே என்று கூறுவார்கள். ஆனாலும் கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தை பேசி நிலமையை திசைதிருப்பி விட்டுள்ளனர்.


2008ஆம் ஆண்டும் கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கிழக்கு மாகாண மக்கள் கேட்டுக் கொண்டனர். இருந்த போதும் எவரும் எதிர்பாராத ஒருவரை அவர் நியமித்தார். அப்போது எவரும் பேசவில்லை.


இன்று முஸ்லிம் முதலமைச்சருக்காக போட்டி போடுகின்றவர்கள் 2008ஆம் ஆண்டு அதற்காக போட்டி போடவும் இல்லை. அதை பெற்றுக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை.


முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. அவர் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும்'  என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .