2026 மே 15, வெள்ளிக்கிழமை

தேசிய அரசாங்கத்தை அமைக்க இதுவே சிறந்த சந்தர்ப்பம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

 'தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இதுவே மிக சிறந்த சந்தர்ப்;பமாகும். இதற்கு முன் பலமுறை நாம் அதனை தவற விட்டுள்ளோம்' என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.


இம்தியாஸ் பாக்கிர்மாக்கரால் எழுதப்பட்ட 'ஹிதுமத (நினைத்த கருத்து) என்ற நூல், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தேரர்களுக்கு கையளிக்கும் வைபவம் சனிக்கிழமை(21) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


'சகல இனங்களும் சகல சமயத்தவர்களும் சகல கட்சிப் பிரிவுகளும் இணைந்து தேசிய நல்லிணக்கம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரு அரசை நிறுவப்பட்டுள்ளது.


இந்நிலையில் தேசிய கருத்துக்கு இசைவாக, தேசிய அரசை ஏற்படுத்த இதுவே சிறந்த சந்தரப்பமாகும்.


முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்திலும் அதன் பின் சந்திரிக்கா அம்மையார் காலத்திலும் இறுதியாக, யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதற்கான சூழ்நிலைகள் உருவாகின.


ஆனால், அதனை நாம் பயன்படுத்தத் தவறியுள்யோம். தற்போது சகல பேதங்களைம்; மறந்து மீண்டும் ஒரு புதுயுகம் பிறந்துள்ளது. இதனால் அதனை நாம் தவற விடக்கூடாது.


பல்லின மக்கள், பல்; கலாசாரம் என்பன ஒன்றிணைந்த இந்த நாட்டில், அதுவே மிகச் சிறந்த ஒரு ஆட்சி முறை என நான் கருதுகிறேன்.


அரசியலில் மீண்டும் பிரவேசிக்க வேண்டும் எனப் பலர் வேண்டுகின்றனர். நான் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் முடியாது. அது என்னோடும் எனது வாழ்வோடும் இணைந்துள்ளது.


இலங்கை வரலாற்றில் எனது தந்தை முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மாக்கார் காலம் முதல் இதுவரை 50 வருடமாக நான அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளேன். எனக்கு பல சந்தர்பங்களில் வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்க முன்வந்தனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மற்றும் தற்போதைய பிரதமர் உட்;பட பல்வேறு அழைப்புக்கள் வந்தன. இவ்வாறான சேவையை விட மக்களோடு இணைந்து இருப்பதும் அரசியலில் ஈடுபடுவதும் எனக்கு மன மகிழ்ச்சியாக உள்ளது. அதனையே நான் விரும்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .