Kogilavani / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவில் இயந்திர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கிடையிலே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இக்கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதில் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago