Sudharshini / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரண பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுகொடுப்பதுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஹெரண பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட கவரவில, மானெலி, ஸ்டொக்கம், ஓல்ட்டன், பெயார்லோன் ஆகிய தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில், ஒவ்வொரு தோட்டங்களிலும் உள்ள முகாமையாளர்கள், ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் நிறைவேற்று அதிகாரி ஆகியோருடனான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியபவன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மேற்;படி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதுடன் அதற்கானதீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இ.தொ.கா. வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தோட்டங்களில் புதிதாக பணிபுரியும் ஆண்,பெண் தொழிலாளர்களின் பெயர்களை பதிவுசெய்தல்;, தற்காலிகமாக பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல்;, தேயிலை கொழுந்துப்பறிக்கப்படாமல் மூடப்பட்ட தேயிலைமலைகளை சுத்திகரித்தல், தேயிலைச் செடிகளுக்கு உரம், கிருமிநாசனிகளை தெளித்தல், தொழிலாளர்களுக்கு தரமான தேயிலையை வழங்குதல் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிலாளர்களின் அவசர தேவைகளுக்கு வாகனங்களை வழங்குதல், குறிப்பாக கர்ப்பிணிகள், குளவிகொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள், சுகயீனம் அடைந்த தொழிலாளர்களுக்கு வாகனவசதிகளை ஏற்படுத்திகொடுத்தல், தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு கூரை தகடுகளை மாற்றுதல், சுகாதாரவசதிகளை ஏற்படுத்திகொடுத்தல், குறித்ததோட்டங்களில் மூடப்பட்ட தேயிலைமலைகளில் வேலையற்ற இளைஞர்,யுவதிகளின் வருமானத்தை பெருக்குதல், அவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்தல் போன்ற விடயங்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், அம்பகமுவபிரதேச சபை தலைவர் தினேஷ;, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலக பிராந்திய பிரதிநிதிகள், தோட்ட தலைவர்கள், தலைவிகள், இ.தொ.கா.வின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago