2026 மே 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி குருவிட்டவுக்கு விஜயம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ


கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது காவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை(26) சென்று பார்வையிட்டார்.


இவர், குருவிட்ட சிறைசாலையில் விளக்கமறியில்  வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்தினபுரி நகரில் அமைந்தள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சமூகசேவைகள் அமைச்சர் ரஞ்ஜித் பண்டாரவின் இல்லத்துக்கு  சென்றபோது அங்கு குழுமியிருந்த பொது மக்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .