Sudharshini / 2015 மார்ச் 03 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து பலவந்தமாக தேசிய கொடியை அகற்றி விட்டு, சிங்கள கொடியை பறக்கவிட முயற்சித்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கண்டிய ஒப்பந்தத்தின் 200ஆம் ஆண்டு நிறைவையொட்டி திங்கட்கிழமை (02) தலதா மாளிகை வளாகத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிகழ்வின் போதே மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் தேசிய கொடியானது மூவினத்தையும் பிரதிப்பளிக்கும் வகையில் நிறங்களை கொண்டுள்ளது. ஆனால் புதிதாக பறக்கவிட முயற்சித்த குறித்த கொடியானது தனியே சிங்கத்தையும் அரச இலைகளை மட்டும் கொண்டு காணப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து தலதா மாளிகையின் நிர்வாகத்தினர் கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்ய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago