2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

வான் விபத்தில் 15 பேர் படுகாயம்

Kogilavani   / 2015 மார்ச் 04 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.பெருமாள்

மஸ்கெலியா, ப்ரௌன்லோ தோட்டத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற வான் விபத்தில் 15 பேர் படுகாமயடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியிலிருந்து சிவனொளிபாத மலையை தரிசித்து விட்டு வந்த வானே இவ்வாறு வீதியை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வானில் பயனித்த 15 பேரும் படுகாயமடைந்துள்ளதுடன் இவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இவ்விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .