Kogilavani / 2015 மார்ச் 05 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொயிஸ்டன் மற்றும் அயரபி ஆகிய தோட்டங்களில் காலாவதியான திரிபோஷா பக்கெட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பொகவந்தலாவை சுகாதார பரிசோதகருக்கு நேற்று புதன்கிழமை(4) முறைபாடு செய்துள்ளனர்.
இம்மாதம் 1ஆம் திகதியிலிருந்து தோட்ட வைத்தியரால் காலாவதியான திரபோசா பக்கெட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாக மேற்படி மக்கள் முறையிட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி தோட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார பரிசோதகர், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காலாவதியான திரிபோசா பக்கெட்டுக்களையும் மீட்டுள்ளார்.
சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரியை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு இந்த திரிபோசாவை தயாரித்து உணவாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago