2026 மே 15, வெள்ளிக்கிழமை

நாட்டின் அதி உயர் பதவியை வகித்த மஹிந்தவுக்கு வேறு எப்பதவியையும் பெற்றுக் கொடுக்க முடியாது: வாசுதே

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஐக்கிய  தேசிய   கட்சி  தலைவர்கள் அறிவற்றவர்களாக செயற்படுகின்றனர். நாங்கள் மஹிந்த   ராஜபக்ஷவுக்கு அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொடுக்க வே  ண்டி வந்துள்ளதாக தவறாக தெரிவிக்கின்றனர். அது முற்;றிலும் பொய்யானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ   இந்நாட்டில் அதி உயர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு வேறு எப்பதவியையும் பெற்றுக் கொடுக்க முடியாது. நாங்கள் முயற்சிப்பது  இந்நாட்டை பாதுகாப்பதற்காகும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார           தெரிவித்தார்.

முன்னாள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் நோக்குடன் கண்டி மத்திய சந்தைக்கு முன்னால    ;   நடைபெற்ற    கூட்டத்தில்   கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்களுக்கு இக்கூட்டத்திற்கு சமூகம் அளிப்பதற்கு கட்சி தடை விதித்துள்ளது.

ஆனால் அத்தடைகளை மீறி நூற்றுக்கணக்கான ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூகம் தந்துள்ளனர். இறுதியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து விடும் அபாயம்    உள்ளது.

இன்று நாடு ஏகாதிபத்தியவாதிகள் வசம் சென்று கொண்டுள்ளது. எமது பலம் ஏகாதிபத்தியவாதிகளிடம் செல்லாது அதனை பாதுகாக்க தைரியம் மிக்க தலைவரான மஹிந்த தேவைப்படுகின்றார் என்றார்.

இக்கூட்டத்தில்   மத்திய  மாகாண  முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .