Kanagaraj / 2015 மார்ச் 09 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு பிரஜையொருவர், நில்வல நீர்வீழ்ச்சியில் விழுந்து காணமல் போயுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பிரித்தானிய பிரஜையான டிமோனி ஜொல் ஜோன்(வயது23) என்பவரே காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டு பிரஜைகள் இருவர், வெளிநாட்டு பெண் பிரஜைகள் இருவர் மற்றும் இலங்கையொருவருடன் சுற்றுலாவந்த குழுவினர். நில்வல நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர்.
இதன்போது நீர்வீழ்ச்சியில் மூழ்கி தத்தளித்த அமெரிக்க பிரஜையான பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டு இறத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, காணாமல் போன பிரித்தானிய பிரஜையை தேடும் பணிகளை தலாத்துஓயா கடற்படை முகாமின் உதவியுடன் இறத்தோட்டை மற்றும் தம்புள்ளை பொலிஸ் நிலையங்களின் உயிர்காப்பு படையினர் முன்னெடுத்துள்ளனர் என்றும் பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago