2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

இருவர் சத்தியப்பிரமாணம்

Kogilavani   / 2015 மார்ச் 10 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

தொழிலாளர் தேசிய சங்கத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இருவரும் நேற்று திங்கட்கிழமை (9) நுவரெலியா பிரதேச சபையில் வைத்து பிரதேச சபைத் தலைவர் என்.சதாசிவன் முன்னிலையில் பிரதேச சபை உறுப்பினர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.

பொன்னையா ரவிச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் விஜயவீரன் ஆகிய இருவருமே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தொழிலாளார் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டார்.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக மலையக முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கரப்பத்தனையைச் சேர்ந்த சச்சிதானந்தன் மற்றும் லிந்துலையைச் சேர்ந்த நாகராஜா ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து விலகி இலங்கை தொழிலாளர் காங்கிரிஸில் இணைந்துகொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் வகித்த பிரதேச சபை உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தொழிலாளர் தேசிய சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில், இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களின் பதவியையும் இரத்துச் செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டதுடன் சச்சிதானந்தன் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்ட இருவருக்கு பதிலாகவே மேற்படி புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .