2026 மே 15, வெள்ளிக்கிழமை

தேயிலை, இறப்பருக்கு 15ஆம் திகதி முதல் உத்தரவாத விலை

Kogilavani   / 2015 மார்ச் 10 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தில் கூறியது போன்று, தேயிலை மற்றும் இறப்பருக்கான உத்தரவாத விலை எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுமென பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எனினும், சிறுதேயிலை மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்களுக்கே இந்த உத்தரவாத விலை பெற்றுகொடுக்கப்படுமென, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பின் போது அமைச்சர் கூறினார்
இதனடிப்படையில், தேயிலை ஒரு கிலோ கிராமின் உத்தரவாத விலை 80 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் இறப்பர் பாலின் உத்தரவாத விலை 380 ரூபாவாகவும் அமையும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .