Sudharshini / 2015 மார்ச் 10 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அக்குறணை நகரை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் விஷேட திட்டமொன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திங்கட்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 20 வருடமாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்துடன் பெருமளவிலான பொருள் சேதமும் ஏற்பட்டது.
எனவே, வெள்ள அனர்த்தத்திலிருந்து பிரதேச மக்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சுமார் 600 இலட்சம் ரூபாய் செலவில் திட்டமொன்று கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டம் சில காரணங்களால் இடையில் தாமதமாகியுள்ளது.
இந்நிலையிலே நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் மேற்படி விஷேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நீர் வழங்கள் வடிகால் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம், தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago