2026 மே 15, வெள்ளிக்கிழமை

சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை

Kogilavani   / 2015 மார்ச் 10 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ                      

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழுவை அமைத்து நாடாளுமன்றத்தை கலைத்து, பொது தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரச உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

'எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை பிரதமராகவும் இரண்டாவதாக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவரை உப பிரதமராகவும் நியமித்து இரண்டரை வருடம் தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி குழு கூட்டம் திங்கட்கிழமை(9) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பது குறித்து தேர்தல் ஆணையாளர், சட்டத்தரணிகள் மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உலகத்தில் எங்கும் இல்லாத அரசியல் முறை, எமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து உலக நாடுகள் புதுமையடைகின்றன.

எமது நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம். 100 நாட்களுக்குள் நல்லாட்சியை ஏற்படுத்துவோம். இன்னும் 45 நாட்கள் எஞ்சியுள்ளன. நாம் கொடுத்த வாக்குறுதிகளை இந்த நாட்களுக்குள் நிறைவேற்ற முடியும்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் இந்நாட்டுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை நிறைவேற்றுவோம்.

அரச அதிகாரிகள் அரசியலில் ஈடபட கூடாது. அரச அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதால் இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது. அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சுதந்தரமாக சேவையாற்ற கூடிய முறையை நாம் ஏற்பத்துவோம்.

சப்ரகமுவ மாகாணத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் யாவும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சரால் சுட்டிகாட்டப்பட்டது. இதை நான் ஏற்று கொள்கின்றேன்.

மேற்படி மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்படும். இப்பணிகளை விரைவில்; ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .