2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

புதிய கட்டடம் வேண்டுமெனக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மார்ச் 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயம், பூஜாபிட்டிய மெதகொடையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு புதிய கட்டடம் ஒன்றை பெற்றுத் தருமாறு கோரி பெற்றோர் பூஜாபிட்டிய, போகாவலை வீதியை மறித்து செவ்வாய்க்கிழமை (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

'இப்பாடசாலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் போதிய அளவு கட்டட வசதி இன்மையால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்தனர்.

புதிய கட்டடம் ஒன்றை அமைத்து தருவதாக கூறி,  சில வருடங்களுக்கு முன்னர்; கடந்த அரசாங்கத்தினால் பழைய கட்டடம் உடைக்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை புதிய கட்டடம் அமைக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்தகொண்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .