Kogilavani / 2015 மார்ச் 11 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாநகர சபையின் புதிய முதல்வராக நிலந்த ரொஷான் கொடஹேன நேற்று செவ்வாய்க்கிழமை(10) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த கபில் அபேரத்ன, கடந்த ஜனவரி மாதம் காலமானதையடுத்தே அவ் வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அதன்பின்பு கடந்த 2006ஆம் ஆண்டு மேற்படி மாநகர சபையின் உப முதல்வராக பதவியேற்றார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் உப முதல்வராக பதவியை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago