Menaka Mookandi / 2015 மார்ச் 12 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
ஆதிவாசி இனத்தில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு நீர் வழங்கல் அதிகார சபையில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு சபையின் தலைவர் கே.ஏ.அன்சாருக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீமை அவரது அமைச்சில் புதன்கிழமை (11) சந்தித்த ஆதிவாசிகளின் மறைந்த தலைவரின் மகனான ஹெணானிகல, 'தமது இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தருமாறு' கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்தே, அந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்குமாறு நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன், ஆதிவாசிகளின் குடியிருப்புகள் உள்ள பிரதேசங்களில் அவர்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாக இதன்போது குறிப்பிட்ட அமைச்சர், வேடுவர் தலைவர் கேட்டுக்கொண்டபடி, ஆதிவாசிகளில் படித்தவர்களுக்கு தமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதன்போது, பிரதித் தலைவர் சபீக் ரஜாப்தீன், நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா ஆகியோரும் உடனிருந்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago