2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

லிந்துலை வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 12 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்துக்கு இடையூறாக ஊழியர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் இவ் ஊழியரை இடமாற்றுமாறும் கோரி, வைத்தியர்களும் தாதியர் மற்றும் ஊழியர்களும் வியாழக்கிழமை(12) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் வைத்தியர்களுடன் தொடர்ந்து முரண்பட்டு வந்துள்ளதுடன் மோசமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக சம்மந்தப்பட்ட ஊழியரை இடமாற்றம் செய்யுமாறு கூறி வைத்திய அதிகாரியும் ஏனைய ஊழியர்களும் நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகளுக்கு கடந்த 5 ஆம் திகதி கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதற்கு சுகாதார திணைக்கள அதிகாரகள் எதுவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வைத்தியர்களும் ஊழியர்களும்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .