2026 மே 15, வெள்ளிக்கிழமை

ம.ம.மு. இளைஞர் அமைப்பின் செயலாளராக ஆர்.ராஜாராம் நியமனம்

Kogilavani   / 2015 மார்ச் 12 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பின் செயலாளராக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதுதொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் நேற்று வியாழக்கிழமை(12) தெரிவித்துள்ளதாவது,

'கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி செயலாளர் ஒருவர் இல்லாத காரணத்தால் அதன் செயற்பாடுகள் பின்னடைந்திருந்தன. இதனாலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் துடிப்புடன் செயற்பட்டதன் காரணமாகவே இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணியை வலுப்படுத்தி அதன்மூலம் மலையக இளைஞர் யுவதிகளை ஒன்று திரட்டி அவர்களுடைய விடயங்கள் தொடர்பாகவும் அவர்களுடைய தேவைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .