Kogilavani / 2015 மார்ச் 12 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
பஸ் வேகமாக சென்று வளைவொன்றில் திரும்ப முற்பட்டபோது அப்பஸ்ஸில் நின்றுகொண்டு பயணித்த மாணவி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை நோர்வூட், தியசிரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், பாடசாலை மாணவி ஒருவரும் ஆசிரியை ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து மஸ்கெலியா- சாமிமலை பிரதேசத்தை நோக்கி சென்ற தனியார் பஸ், நோர்வூட்- தியசிரிகம வளைவில் வைத்து வேகமாக திரிம்பியுள்ளது. இதன்போது நின்றுகொண்டு பயணித்த மேற்படி இருவரும் நிலைத்தடுமாறு பஸ்ஸினுள்ளே விழுந்து படுகாயமடைந்துள்ளதுடன் உடனடியாக இருவரும் மேற்படி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் ஆசிரியை காயங்களுக்கு சிகிச்சை பெற்றுகொண்டு வீடு திரும்பியுள்ளதுடன் காயமடைந்த மாணவியை மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஸ்ஸின் சாரதியை நோர்வூட் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago