Kanagaraj / 2015 மார்ச் 13 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ரஞ்சித் ராஜபக்ஷ
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்;டட திறப்பு விழா கைவிடப்பட்டது என்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த போது திடிரென அது கைவிடப்பட்டதாக இந்தியத் தூதுவருக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தினால் ஹட்டன்- டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சங்க கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்;டடம் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருக்கும் போது திடிரென அது கைவிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் போதியளவு வசதி இல்லாத காரணத்தினால் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவியில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டடம் அனைத்து வசதிகளும் உள்ள பெரியளவிலான ஒரு வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தி அக்கட்டடத்தை இந்த மாதம் 15ஆம் திகதி திறந்து வைப்பதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்த புதிய கட்டடத்துக்கு காந்தி என பெயர் வைப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காந்தி சிலை ஒன்று அங்கு வைப்பதற்கும் தகுந்த நடவடிக்கையை ஹட்டன் நகரின் பிரதான வர்த்தகரும் சங்கத்தின் உறுப்பினருமான தங்கநாயகத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல், குறித்த புதிய கட்;டடத்தை திறப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் பிரதேச வாசிகள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அழகமுத்து நந்தகுமார் கருத்து
இங்கு கருத்து தெரிவித்த ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் அழகமுத்து நந்தகுமார்
15 இலட்சம் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் வாழும் மலையகத்திற்கு இந்தியப் பிரதமரை அழைப்பதற்கு மலையக தமிழ் அரசியல்வாதிகளுக்கு முடியாதது ஒரு கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார்.
புதிய கட்டடத்தை திறப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன, இந்திய தூதுவர் மற்றும் மலையக அரசியல்வாதி தலைமையில் உடனடியாக ஏற்பாடுகள் செய்வதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago