2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

'கிராமிய அபிவிருத்தி நிலையங்கள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்கலாம்'

Gavitha   / 2015 மார்ச் 14 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

கிராமங்களில் இடம்பெற்று வரும் தீய செயற்பாடுகளை தடுப்பதற்கே கிராமங்களில் கிராமிய அபிவிருத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தைகள், சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஐpத் பண்டார தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தைகள், சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறந்த கிராமிய அபிவிருத்தி சங்கங்களை தெரிவு செய்து, அவற்றுக்கு பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (12) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 01ஆவது இடத்தை பெற்றுக்கொண்ட கிராமிய அபிவிருத்தி சங்கத்துக்கு 3 இலட்சம் ரூபாயும் 02ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட  கிராமிய அபிவிருத்தி சங்கத்துக்கு 2 இலட்சம் ரூபாயும் 03ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட கிராமிய அபிவிருத்தி சங்கத்துக்கு ஒன்றரை இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

'கிராமங்களில் கிராமிய அபிவிருத்தி நிலையங்கங்கள் அமைக்கப்பட்டு,  அதனூடாக சிறுவர் துஷ்பிரயோகங்களை தடப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்கள், தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் சப்ரகமுவ மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தைகள், சிறுவர் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சின் மூலம் செய்து வருகின்றோம்.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களில்,  கிராமிய அபிவிருத்தி நிலையங்கள் மக்களுக்கு எந்தளவில் சேவை செய்துள்ளது என்பதை இனங்காண்பதற்கே, எமது அமைச்சின் மூலம் இம்மாகாணத்தில் உள்ள கிராமிய அபிவிருத்தி நிலையங்களுக்கிடையில் போட்டிகளை நடாத்தி, அதில் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய கிராமிய அபிவிருத்தி நிலையங்களுக்கு இலட்சக்கணக்கான பரிசில்களை வழங்கி, அவற்றை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சப்ரகமுவ மாகாணத்தில் கிராமங்களில் உள்ள அனேகமான கிராமிய அபிவிருத்தி நிலையங்கள் சரியாக இயங்காமல், அது பெயர் அளவில் மட்டும் இயங்கி வருவதாக அதிகாரிகளின் முறைபாட்டிலிருந்து தெரிய வருகின்றது.
முறைப்படி இயங்காத கிராமிய அபிவிருத்தி நிலையங்கள் குறித்து இனங்கண்டு அவற்றை மக்களுக்கு சேவையாற்ற கூடிய வகையில் இயங்க வைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு சேவையாற்றவே நாம் வந்துள்ளோம். எனவே மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதவிகள் தேவையில்லை. மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்' என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில இரத்தினபுரி பிரதேச செயலாளர் சித்ரா மானேல் கோட்டவத்த அமைச்சின் செயலாளர் மாலணி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .