Gavitha / 2015 மார்ச் 15 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்து கண்டி மாவட்ட மக்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை, நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு அக்குறணையில் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பீடத்தின் ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர் என்.பீ.எம். சைபுதீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
அக்குறணை, அரபா திருமண மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (21) மாலை 3.45க்கு ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வில், 'உத்தேச அரசியல் சீர்திருத்தமும் தேர்தல் முறை மாற்றமும் முஸ்லிம்களும்' என்ற தலைப்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் உரையாற்றவுள்ளார்.
'புதிய அரசியல் மாற்றங்களும் முஸ்லிம்களது எதிர்காலமும்' என்ற தலைப்பில், என்.எம். அமீன் சொற்பொழிவாற்றவுள்ளதுடன், 'தேர்தல் முறை ஒரு நோக்கு' என்ற தொனிப்பொருளில், ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர் என்.பீ.எம். சைபுதீன் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்குறணை மற்றும் கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இவ்விடயத்தில் ஆர்வமுள்ள சகலரையும் கலந்துகொள்ளுமாறு, நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்புடைய மேலதிக விபரங்களுக்கு, 0777-842849 என்ற அலைபேசி இலக்கத்தினூடாக, நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் செயலாளர் இர்பான் காதரை தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago