Gavitha / 2015 மார்ச் 15 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம்
மலையகத்தில் வாழும் இந்தியத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு டெல்லியிலிருந்து அழைப்பு விடுக்கப்படும். மலையகத்தில் தற்போது காணப்படும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அங்கு வந்து கலந்துரையாடுங்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக, கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (13) இலங்கைக்கு வருகைதந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக தலைமைகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று சனிக்கிழமை (14) இடம்பெற்றது.
கொழும்பு தாஜ் ஹோட்டலில் 15 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்ற இந்த சந்திப்பில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது, மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கல்வி இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய வம்சாவழியின் சுமார் 16 இலட்சம் பேர் மலையத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். 1964 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்து-சிலோன் ஒப்பந்தம் காரணமாக, மலையகத்தில் இருந்த பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பிச்சென்றுவிட்டனர். அவ்வாறு அவர்கள் சென்றிருக்காவிடில், தற்போது மலையகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள்.
ஆனால், தற்போது 7, 8 உறுப்பினர்கள் மாத்திரமே இருக்கிறனர். இந்த எண்ணிக்கையும் புதிய தேர்தல் முறைமையில் குறைவடைந்து விடுமோ என்ற பயம் எம்மத்தியில் நிலவி வருகின்றது.
கடந்த 30 வருடகாலமாக, மலையக மக்கள் அபிவிருத்தியில் பின்னடைவையே கண்டு வருகின்றனர். கல்வியிலோ, தொழில் வாய்ப்பிலோ மலையக மக்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. அது மாத்திரமல்லாது லயன் வீட்டுத்திட்டத்திலேயே வாழ்ந்து வரும் இந்தியா வம்சாவழியினருக்கு இன்னும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை. இந்திய வம்சாவளியினர் இவ்வாறு சிரமப்பட்டு வாழ்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியா இதற்கான தீர்வை வழங்க முன்வரவேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இக்கோரிக்கைகளுக்கு, மலையக மக்கள் எவ்வாறான துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது தொடர்பாக தான் இலங்கையை வந்தடைந்தவுடன் அறிந்துகொண்டதாகவும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, தான் புதுடெல்லியில் இருந்து அழைப்பு விடுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதே சமயம், சீதையை சிறை வைத்திருந்ததாக கூறப்படும் வரலாற்று சிறப்பு மிகக் சீதாஎலிய கோவிலுக்கு இந்தியாவைச் சேர்ந்த பல பக்தர்கள் வந்து போகின்றமையால், அதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயர் தூதுவராலயத்துடன் தொடர்ந்து கொண்டு அப்போதே தெரியப்படுத்தியதாகவும் இராஜங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago