2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் பலியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) மாத்தளை, வில்கமுவ- கங்கசிரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.விஜேரத்ன பண்டா என்ற (வயது 50) நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக மேற்படி நபர் கட்டுத்துவக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கட்டுத்துவக்கை கையிலெடுத்தபோது, அது தவறுதலாக வெடித்ததால் மேற்படி நபர் படுகாயமடைந்த நிலையில் வில்கமுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வில்கமுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .