2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

தனி வீட்டுத்திட்டத்தால் பெண்களின் வாழ்விலும் சுபீட்சம் ஏற்படும்

Kogilavani   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள தனி வீட்டுத் திட்டமானது, பெருந்தோட்டத்துறை பெண்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்துமென  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவை லெட்சுமி தோட்ட மத்திய பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“தோட்டப்பகுதிகளில் தற்போதுள்ள லயன் குடியிருப்புக்களில் வாழ்கின்ற பெண் தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவுமே வாழ்கின்றனர்.

இந்நிலையில் தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள தனி வீட்டுத்திட்டத்தினால் பெண் தொழிலாளர்கள் உட்பட ஏனைய பெண்களின் குடும்ப சூழ்நிலையில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .