2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

நிலம் தாழிறங்கியதால் 4 குடும்பங்கள் இடம்பெயர்வு

Kanagaraj   / 2015 மார்ச் 16 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை - அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழ்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால்,  குறித்த காணிக்கு அருகில் வசித்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். 

நிலம் தாழிறங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக புவிசரிதவியல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .