2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை, ஹபுருகஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இணைக்கப்பட்டு சேவையாற்றிய அதே பிரதேசத்தைச்சேர்ந்த 31 வயதான நவீன் தேசப்பிரிய என்பரே மரணமடைந்துள்ளார். 

துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை. 

எனினும், இராணுவத்திலிருந்து தப்பிவந்த இராணு வீரர் ஒருவரே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகநபர் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகிவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .