2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

18 வருட சித்திரவதைக்கு பொல்லால் தீர்வு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

மதுபோதையில் கடந்த 18 வருடங்களாக துன்புறுத்தி வந்த கணவனை, பொல்லால் தாக்கி படுகொலை செய்த மனைவியை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று காவத்தை, தம்புலுவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரகோன் முதியன்சலாகே நிஹால் ஹேமந்த (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவி உட்பட குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(14), வழமைப்போன்று மதுபோதையில் வீட்டுக்குச்சென்ற மேற்படி குடும்பஸ்தர், மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளதுடன் மனைவியை பொல்லாலும் தாக்கியுள்ளார். தாக்குதலையடுத்து பொல்லுடன் கீழே விழுந்த மனைவி மீண்டெழுந்து, அதே பொல்லால் கணவனை தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து குறித்த மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .