Sudharshini / 2015 மார்ச் 17 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,732 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில்திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த ஆகியோர் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, மாகாண சபை உறுப்பினர்கள், செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago