2026 மே 15, வெள்ளிக்கிழமை

ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமசந்திரன்

ஜக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கே.கே பியதாஸவுக்கு எதிராக, ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (17) கறுப்புக் கொடி ஏந்தி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

தங்களுக்கு உரித்தான வாகனம் நிறுத்தும் இடத்தை மேற்படி உறுப்பினர், முன்னாள் வாகன சாரதிகள் சங்கத்தின்  தலைவரிடமிருந்து ஏமாற்றி பெற்றுள்ளதாகவும் தற்போது தங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரிவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பல வருட காலங்களாக தாங்கள் இவ்விடத்தில் வாகனங்களை நிறுத்தி வைப்பதாகவும் தற்போது, வெளியேற சொல்வது நியாயமற்ற செயல் எனவும் அவர்கள்  தெரிவித்தனர்.

இது தொடர்பாக உறுப்பினர் கே.கே.பியதாஸவிடம் வினவிய போது,

குறித்த சங்கத்தின் தலைவரிடமிருந்து சட்ட பூர்வமாக தான் பணம் கொடுத்து குறித்த இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே, தற்போது மேற்படி இடம் தனக்கு சொந்தமானதென அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .