2026 மே 15, வெள்ளிக்கிழமை

அசோக்க முதியோர் இல்ல அபிவிருத்திக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

ரம்புக்கன தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அசோக்க முதியோர் இல்லத்தை அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 350 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சப்ரகமுவை மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.  

சப்ரகமுவ மாகாண சபையில் இன்று(17) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

1968ஆம் ஆண்டு பொதுமக்களின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மேற்படி முதியோர் இல்லம், தற்போது ரம்புக்கன பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.

மேற்படி முதியோர் இல்லம் சேதமைடைந்த  நிலையில் உள்ளதை அறிந்து நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.

அதில் வாழும் முதியோர்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதை அவதானித்தே இதனை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.  

சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 350 இலட்சம் ரூபாய் செலவில் சகல வளங்களையும் கொண்ட இரு மாடி கட்டடமாக இம்முதியோர் இல்லம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .