2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மாத்தளை – கிவுல வீதியை புனரமைக்குமாறு பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை - கிவுல வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை (17), பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி பாதையானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.  

முவன்தெனிய, கிவுல கய்காவவெல, பண்டாரபொல, கொடபொல, வேரக ஆகிய கிராம மக்களும் இப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பாதையானது புனரமைப்பின்றி காணப்படுவதால் தாம் பலவேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறி, சாலை மறியல் போராட்டதிலும் ஈடுப்பட்டனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு வருகைதந்த அமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்கவின் செயலாளர் மைத்திரி டோசன், 'இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன் எதிர்வரும் மே மாதத்துக்கு பின்பு பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், மைத்திரி டோசனின் உறுதியை அடுத்து நண்பகல் 12 மணிக்கு கைவிடப்பட்டது. அத்துடன், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .