2026 மே 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் படுகாயம்

Sudharshini   / 2015 மார்ச் 17 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, மாத்தளை ஏ -9 வீதியின் அலவத்துகொடை 9ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டரை வயதுடைய குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டியிலிருந்து  தம்புள்ளைக்கு செவ்வாய்க்கிழமை (17) மரக்கறி ஏற்றி சென்றுக்கொண்டிருந்த லொறியுடன் எதிரே வந்த முச்சக்கர வண்டி, நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த  தாய், தந்தை உட்பட இரண்டரை வயது குழந்தையும் படுகாயமடைந்துள்ளதென அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி சாரதியின் கவனக்குறைவே இவ்விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், லொரியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .