2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

விபத்தில் ஒருவர் பலி

Sudharshini   / 2015 மார்ச் 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

நுவரெலியா- ஹட்டன் பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், ஆணொருவர் உயிரிழந்துள்ளார் என  நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கெலேகாலை எனும் இடத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில், நுவரெலியா, பிளக்பூல் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிலாகே கருணாதிலக்க (வயது 52) என்பவரே பலியாகியுள்ளார்.

நுவரெலியா, சாந்திபுரத்திலுள்ள மரண வீடொன்றுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் ஐந்து பேர் சென்று விட்டு, வீடு திரும்பி வரும்போது பிளக்பூல் எனும் இடத்தில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய நால்வரும் காயமடைந்துள்ளனர். எனினும் உயிரிழந்தவரை அதேயிடத்தில் விட்டுவிட்டு, அவருடன் வந்த ஏனைய நால்வரும் முச்சக்கரவண்டியையும் செலுத்திக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

விபத்து குறித்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் முச்சக்கரவண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .