2026 மே 15, வெள்ளிக்கிழமை

நடுவீதியில் கவிழந்த முச்சக்கரவண்டியை பந்தாடியது பஸ்

Princiya Dixci   / 2015 மார்ச் 18 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நடுவீதியில் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் மீது எதிரே வந்த பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவுக்குபட்ட கினிகத்தேனை பகதுலூவ பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளானது.

ஏககாலத்தில் நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், அந்த முச்சக்கரவண்டியில் மோதியுள்ளது. 
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்டுவருக்கின்றனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் 3 பேர் பயணித்ததாகவும் அவர்களுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிவித்த பொலிஸார், முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .