Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
முச்சக்கரவண்டி சாரதியொருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில், பொதுஜன ஐக்கிய முன்னணியின் லிந்துலை நகரசபை உறுப்பினர் பசான் ஹிமாலக்கவை தலவாக்கலை பொலிஸார், நேற்று புதன்கிழமை (18) கைதுசெய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியான ஜானக சந்திரரத்ன என்பவர், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தலவாக்கலை நகரில் தான் முச்சக்கர வண்டி செலுத்துவதாகவும் முச்சக்கரவண்டியை தரிப்பிடத்தில் நிறுத்துவதால் தன்னுடைய கடை மறைக்கப்படுவதாகக் கூறியே மேற்படி நகரசபை உறுப்பினர், தன்னைத் தாக்கியதாகவும் தாக்குதலுக்கு உள்ளான முச்சக்கரவண்டி சாரதி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேற்படி உறுப்பினர், இதேபோன்று முச்சக்கரவண்டி சாரதிகள் பலரிடம் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ்விடத்திலிருந்து முச்சக்கரவண்டி தரப்பிடத்தை அகற்ற அவர் முயற்சித்து வருவதாகவும் பொலிஸாரிடம் அந்த சாரதி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago