Kogilavani / 2015 மார்ச் 19 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
மரதன் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்த தம்பதியனரின் வீட்டில், விளையாட்டுடன் தொடர்புடைய நூதனசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஒருவர் உதவி புரிந்த சம்பவமொன்று இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றது.
இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் வசித்து வரும், ஆர்.ஏ.சந்திரதாச மற்றும் கே.ஜீ.ஜீ.மெனிக்கே ஆகிய தம்பதியினர், மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனை படைத்தவர்களாவர். இவர்கள் தங்களது இல்லத்தில் விளையாட்டுடன் தொடர்புடைய நூதனசாலையொன்றை அமைத்து வருகின்றனர்.
இந்த நூதனசாலைக்கு அண்மையில் திடீரென விஜயம் மேற்கொண்ட சப்ரகமுவ மாகாண சபையின் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராகுபந்த, மேற்படி நூதனசாலையை தனியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். இதற்கான அடிக்கல்; நாட்டும் விழா, நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்றது.
இதற்காக, சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையொன்றும் மேற்படி தம்பதியினரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago