2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்பு

Kogilavani   / 2015 மார்ச் 19 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

பெல்மதுளை நீலகாமம் தோட்டத்தில் 110 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ நிலையம் செவ்வாய்க்கிழமை(17) திறந்து வைக்கப்பட்டது.

சப்ரகமுவை மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்து.

மேற்படி கழிவு முகாமைத்துவ நிலையத்தை அமைப்பதற்கு தேவையான இரண்டு ஏக்கர் நிலம், பத்து இலட்சம் செலவில் பெறப்பட்டுள்ளது.

பெல்மதுளை பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் மேற்படி கழிவு முகாமைத்துவ நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 6 டெக்டர் வரை கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுலகுமார ராகுபந்த, பெல்மதுளை பிரதேச சபை தலைவர் லக்ஷ்மன் பிரேமரத்ன, பலாங்கொடை நகர பிதா நிமால் வீரசிங்க, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .