2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

தேசிய அரசாங்கத்தினால் நல்ல தீர்வுகளை காணலாம்: கிரியெல்ல

Sudharshini   / 2015 மார்ச் 23 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள முக்கிய மூன்று சவால்களை வெற்றிக்கொள்வதுக்கு, தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதன் ஊடாக நல்ல தீர்வு ஒன்றை காணமுடியும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்;மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பேராதனை, கெட்டம்பே ஸ்ரீ ராஜோபவானாராம அதிபதி சங்கைக்குரிய கெப்பட்டியாவே சிரிவிமல தேரரைச் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

நாடு இன்று முக்கிய மூன்று சவால்களை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச சமூகங்கள் இலங்கை மீது தொடுத்து வரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சவால், யுத்தகால சட்ட மீறல்கள் தொடர்பாக மேற்குலக நாடுகள் விடுக்கும் சவால்கள், தேசிய ரீதியாக எழுந்துள்ள சில சவால்களுக்கான சமநிலைத் தன்மை கொண்ட தீர்வு போன்றவற்றுக்கு தேசிய அரசு என்ற எண்ணக்கரு மிகப் பொருத்தமானதாக அமையும்.

எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதன் ஊடாக நல்லதொரு சூழலை கட்டியெழுப்ப முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .