2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

சுற்றிவளைப்பு

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட போஷனைப் பொதிகளுக்குள் இடுவதற்காக பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விநியோகித்த வர்த்தக நிலையங்களில் நேற்று திங்கட்கிழமை (23) சுற்றவளைப்பை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அந்நிலையங்களிலிருந்து பாவனைக்கு உதவாத மேலும் சில உணவுப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நுவரெலியா, அம்பகமுவ, வென்ஞர் தோட்டத்தைச்சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட போஷனைப் பொதிகளுக்குள் மேற்படி பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குப் பொதிகளுக்குள் இடும் உணவுப் பொருட்களை வழங்கும் ஒப்பந்தத்தை கினிகந்தேனையிலுள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கமே ஏற்றிருந்தது. பின்னர், அச்சங்கத்தினால் அந்த ஒப்பந்தம், தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வர்த்தக நிலையத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்த கடலை, கௌப்பி மற்றும் நெத்தலிக்கருவாடு ஆகியன பாவனைக்கு உதவாதவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மேற்படி உணவுப் பொருட்கள் மாத்திரம் அகற்றப்பட்ட நிலையில், கர்ப்பிணிகளுக்கான போஷாக்குப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

இதனையடுத்து, மேற்படி வர்த்தக நிலையத்தை நேற்று சுற்றிவளைத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அந்நிலையங்களிலிருந்து பவனைக்கு உதவாத மேலும் சில உணவுப் பொருட்களை மீட்டனர்.

அத்துடன், மேற்படி வர்த்தக நிலையத்தின் உரிமையாளரையும் கினிகத்தேனை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .