Kogilavani / 2015 மார்ச் 24 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
மதுபோதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்தியதாக கூறப்படும் சாரதியை ஹட்டன் பொலிஸார் திங்கட்கிழமை(24) மாலை கைதுசெய்துள்ளனர்.
கொட்டகலை வைத்தியசாலையிலிருந்து 8 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, செனன் பகுதியில் வைத்து இந்த அம்யூலன்ஸ் வண்டியை சோதனை செய்தபோது, சாரதி மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
பின் நோயாளர்கள் வேறொரு அம்பியுலன்ஸ் வண்டியின் மூலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதுடன் சாரதியை பொலிஸார் கைதுசெய்தனர்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago